Saturday 30 July 2011

அறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.

கிளிநொச்சியில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைவர்ருடனான பத்திரிகையாளர் சந்திப்பில் குகநாதன். கோவைப்படம்:- வின்சென்ற் ஜெயன்
மூத்த பத்திரிகையாளர் குகநாதன் குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளகியிருப்பதை சிவராம் ஞாபகார்த்த மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஜனநாயகம் சூழல் உருவாகியுள்ளது என்று அரசு கூறிவரும் இவ்வேளையில் ஊடகங்களுக்கெதிரான பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நீண்ட கால போர் சூழலில் சிக்கியிருந்த இலங்கை ஊடகத்துறை தற்போது சுதந்திரமாக செயற்பட வாய்ப்புக்கள் கிடைத்திருப்பதாக அவ்வப்போது அரசாங்க தரப்பு தெரிவித்தும் வருகின்றது.

எனினும் ஊடகத்திற்கெதிரான பயரங்கரவாதத்திற்கு துணைபோகின்றவர்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று சொல்லுமளவிற்கு நிலைமைகள் இருக்கின்றன, இதற்கிடையில் ஊடகத்திற்கொதிரான பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களும் முடக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஊடகத்துறை தொடர்பான விழிப்புணர்வற்ற ஒரு சமூகம் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. ஊடகவியலாளர்களின் பணிகள் கொச்சப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சமூகச் சீரளிவை நோக்கிய இருண்ட சமூகம் உருவாக்கப்பட்டுவருகின்றது.

தவிரவும்

ஞானசுந்தரம் குகநாதன் பல போர்ச் சூழ்நிலைகளின் மத்தியில் ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார், பல வரலாற்றுக் காலங்களையும், பல வரலாற்று நிகழ்வுகளையும் கண்டும் அனுபவித்தும், சகித்தும், சாதித்தும், எதிர்த்தும், எழுதியும் உள்ளார். பல அரசியல் தலைவர்களிடம் மரியாதைக்குரியவராகவும், செல்வாக்குள்ளவராகவும் இருக்கின்றார். இவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஊடகத்துறைக்கு மட்டுமல்ல வரலாறுகளை நேசிப்பவர்களையும் ஜனநாயகத்தை மதிப்பவர்களையும் அச்சுறுத்துவதாகவே அமைந்துள்ளது.

பல தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகள் ஞானசுந்தரம் குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்ட போது தொய்வதீனமாக தப்பிபிழைத் அவர் தொடர்ந்தும் குடாநாட்டை விட்டுவெளியேறாது தற்துணிவுடன் வாழ்ந்து வந்தார். இந் நிலையில் தூர்ரதிஸ்டவசமாக வெள்ளிக்கிழமை (29.07.2011) தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற செய்தி எம்மை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

அறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.

No comments: